பிரான்ஸ் தேசிய சபை இந்த வாரம் வேலை இழப்பு காப்பீட்டுக்கான சமூக இணைப்பாளர்களின் உடன்பாட்டை சட்டமாக்கும் மசோதாவை இறுதியாக நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய சட்டம், குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை இழப்பு நலன்களை (Unemployment Benefits) எளிதாக பெறுவதற்கான விதிகளை தளர்த்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் குறைந்தபட்சம் 5 மாதங்கள் வேலை செய்திருந்தாலே நலன்களுக்கு தகுதி பெற முடியும் என்பதே முக்கிய மாற்றமாகும்.
சீசனல் தொழிலாளர்களுக்கும் இதே தளர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும், பணியாளர்கள் வழங்கும் காப்பீட்டு பங்களிப்பு விகிதம் 4.05% இலிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது.
உயர்ந்த வருமானம் பெறும் நபர்களுக்கான நலன்களில் குறைப்பு விதி (degressivity) 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்படும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய விதிகள் இந்த வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் எனவும் இச்சட்ட மாற்றங்கள் இளைஞர்கள் வேலை இழந்தபின் விரைவாகவும் எளிமையாகவும் நலன்களைப் பெற உதவும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.





Leave a Reply