September 17, 2026
Breaking News
சவுதியின் முதல் ஆடம்பர ரயில் 2027ல் பயணத்தைத் தொடங்கும் அகதி மற்றும் குடியேற்ற மசோதா குறித்து ஐ.நா. கவலை பிரான்ஸில் எரிபொருள் உதவித் திட்டங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு 2027 அதிபர் தேர்தல்: சோசலிஸ்ட் கட்சி முதன்மைத் தேர்தலில் பங்கேற்க மாட்டேன் என்கிறார் பிரான்சுவா ஒலாந்த் கனடாவில் தற்காலிக குடியிருப்பு விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு காலம் உயர்வு இந்தியர், சீனர், ரஷ்யர்களுக்கு ஓமன் நிபந்தனை விசா இல்லா நுழைவு மட்டக்குளியில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம் ஒன்பது ஷெங்கன் நாடுகளில் நுழைவு-வெளியேற்ற முறை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை மட்டக்குளியில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம் ஷெங்கன் பகுதியில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து எல்லைக் கண்காணிப்பு நீட்டிப்பு வைக்கோல் எரிப்பு விவகாரத்தில் அமைச்சர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு செப்டம்பர் இறுதியில் விரிவடையும் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை இம்ரான் கானை சிறையில் நடத்துவது குறித்து மகன்கள் கடும் குற்றச்சாட்டு இலங்கையில் ரயில்வே தொழிற்சங்கங்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் நள்ளிரவு தொடக்கம் திருகோணமலை வைத்தியசாலையில் ரூ.2,403 மில்லியன் செலவில் இதய சிகிச்சைப் பிரிவு கட்டுமானம் தொடக்கம் சவுதியின் முதல் ஆடம்பர ரயில் 2027ல் பயணத்தைத் தொடங்கும் அகதி மற்றும் குடியேற்ற மசோதா குறித்து ஐ.நா. கவலை பிரான்ஸில் எரிபொருள் உதவித் திட்டங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு 2027 அதிபர் தேர்தல்: சோசலிஸ்ட் கட்சி முதன்மைத் தேர்தலில் பங்கேற்க மாட்டேன் என்கிறார் பிரான்சுவா ஒலாந்த் கனடாவில் தற்காலிக குடியிருப்பு விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு காலம் உயர்வு இந்தியர், சீனர், ரஷ்யர்களுக்கு ஓமன் நிபந்தனை விசா இல்லா நுழைவு மட்டக்குளியில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம் ஒன்பது ஷெங்கன் நாடுகளில் நுழைவு-வெளியேற்ற முறை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை மட்டக்குளியில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம் ஷெங்கன் பகுதியில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து எல்லைக் கண்காணிப்பு நீட்டிப்பு வைக்கோல் எரிப்பு விவகாரத்தில் அமைச்சர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு செப்டம்பர் இறுதியில் விரிவடையும் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை இம்ரான் கானை சிறையில் நடத்துவது குறித்து மகன்கள் கடும் குற்றச்சாட்டு இலங்கையில் ரயில்வே தொழிற்சங்கங்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் நள்ளிரவு தொடக்கம் திருகோணமலை வைத்தியசாலையில் ரூ.2,403 மில்லியன் செலவில் இதய சிகிச்சைப் பிரிவு கட்டுமானம் தொடக்கம்
முகப்பு Article செய்தி
பிரான்சில் நடைமுறையில் உள்ள டப்ளின் நடைமுறை மற்றும் பிங்கர் பிரிண்ட் விதிமுறைகள்
Article

பிரான்சில் நடைமுறையில் உள்ள டப்ளின் நடைமுறை (Dublin procedure)

📅 வெளியீடு: 13 May 2026 01:41 🔄 புதுப்பிப்பு: 28 Aug 2026 17:26 👤 Nerikkalam 👁 19 பார்வைகள்

தற்போது அமலில் உள்ள டப்ளின் (Dublin) அமைப்பின் முக்கிய நோக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) ஒரு அகதி விண்ணப்பத்தை எந்த ஒரு உறுப்புநாடு செயல்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதாகும். இந்த நடைமுறை பல அளவுகோள்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அவற்றில் முக்கியமானது “முதல் நுழைந்த நாடு” (First Country of Entry) என்ற விதியாகும். அதாவது, ஒரு அகதி முதலில் எந்த EU நாட்டில் நுழைகிறாரோ அந்த நாடே அவரது அகதி விண்ணப்பத்தை பரிசீலிக்க பொறுப்பாகும்.

பிரான்சில் asylum கேட்க முதலில் 01 42 500 900 இந்த தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து முன்கூட்டிய அனுமதியை பெற்று SPADA அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

நேரடியாக OFPRA அல்லது Préfecture-க்கு செல்ல முடியாது. SPADA உங்களுக்கு GUDA appointment பெற்றுத் தரும்.

GUDA-வில் Préfecture உங்கள் identity, route, visa, fingerprint போன்றவற்றை பார்க்கும். OFII accommodation, allowance போன்ற reception rights பற்றி பதிவு செய்யும் (முழு விவரம்)

உங்கள் கைரேகை வேறு EU நாட்டில் இருந்தால் உதாரணம் இத்தாலி, குரோஷியா, கிரீஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் முன்பு பதிவு இருந்தால் பிரான்ஸ் உங்களை Dublin Procedure-ல் வைக்கலாம்.

டப்ளின் நடைமுறையில் வைத்தால் உங்களுக்கு சாதாரண OFPRA file உடனே தரப்படாது. அதற்கு பதிலாக ADDA / Attestation procédure Dublin கிடைக்கும்.

பிரான்ஸ் Préfecture மற்றைய EU நாட்டிடம் கோரிக்கை அனுப்பும், இந்த நபரின் தஞ்சம் வழக்குக்கு நீங்கள்தான் பொறுப்பு என்று அந்த EU நாட்டிடம் கோரிக்கை அனுப்பப்பட்டதும் அந்த நாடு ஏற்றுக்கொண்டால் பரிமாற்ற முடிவு வரும்.

அந்த நாடு பொறுப்பை ஏற்றால் France உங்களுக்கு Arrêté de transfert (transfer order) கொடுக்கலாம். அதாவது உங்களை அந்த EU நாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்யலாம்.

பிரான்சில் Dublin procedure கீழ் உங்களுக்கு மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு அனுப்பும் “Arrêté de transfert” என்ற transfer decision வந்தால்அதை எதிர்த்து நீதிமன்றத்தில் appeal செய்யும் உரிமை உங்களுக்கு உள்ளது.

பொதுவாக இந்த appeal “Tribunal Administratif” எனப்படும் நிர்வாக நீதிமன்றத்தில் செய்யப்படுகிறது.

Transfer order கிடைத்த பிறகு குறுகிய காலத்திற்குள் பொதுவாக 15 நாட்களுக்குள் appeal செய்ய வேண்டும் என்பதால் paper கிடைத்த உடனே lawyer அல்லது refugee association உதவியை பெறுவது மிகவும் முக்கியம்.

Appeal செய்த பிறகு பல சந்தர்ப்பங்களில் court முடிவு வரும் வரை transfer தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.

இதனால் France உடனடியாக அந்த நபரை Italy, Croatia, Greece போன்ற நாடுகளுக்கு அனுப்ப முடியாமல் இருக்கும்.

அந்த நாட்டில் மனிதாபிமான பிரச்சினைகள் தங்கும் வசதி இல்லாமை மருத்துவ சேவை குறைபாடு குடும்ப உறுப்பினர்கள் பிரான்சில் இருப்பது உடல் நலப் பிரச்சினைகள் அல்லது Préfecture சரியான நடைமுறைகளை பின்பற்றாதது போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு appeal செய்யலாம்.

குறிப்பாக interpreter வழங்காதது documents சரியாக விளக்கப்படாதது போன்ற procedural mistakes கூட appeal-க்கு முக்கிய காரணமாக பயன்படுத்தப்படுகின்றன. Court transfer-ஐ ரத்து செய்தால் France தானே asylum application-ஐ process செய்ய வேண்டிய நிலை உருவாகலாம்.

அதனால் Dublin transfer order கிடைத்தால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சட்ட உதவி பெறுவது மிகவும் முக்கியமானது.

அல்லது 18 மாதங்கள் தலைமறைவு

டப்ளின் செயல்முறை கீழ் பிரான்ஸ் உங்களை மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு அனுப்பினால் பொதுவாக அந்த இடமாற்றம் 6 மாதங்கள் நடைபெற வேண்டும். உதாரணமாக இத்தாலி, குரோஷியா, கிரீஸ் போன்ற நாடுகள் உங்கள் புகலிட வழக்கு-க்கு பொறுப்பேற்க ஒப்புக்கொண்ட பிறகு பிரான்ஸ் அந்த 6 மாத காலத்திற்குள் உங்களை அந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும்.

ஆனால் புகலிடக் கோரிக்கையாளர் அதிகாரிகளிடம் இருந்து மறைந்து விட்டதாக அல்லது தொடர்பில் இல்லாமல் போய்விட்டதாக Préfecture கருதினால் இந்த 6 மாத காலவரையை 18 மாதங்களாக நீட்டிக்கலாம். இதையே 18 மாதங்கள் தலைமறைவு என்று அழைக்கின்றனர்.

முகவரி மாற்றத்தை தெரிவிக்காமல் இருப்பது Préfecture அல்லது போலீஸ் நியமனம்களுக்கு (appointment) செல்லாமல் இருப்பது தங்குமிடம் ஐ விட்டு வெளியேறி ட்ரேஸ் செய்ய முடியாத நிலை உருவாகுவது அல்லது இடமாற்றம் செய்யப்படும் நாளில் காணாமல் போவது போன்ற சூழ்நிலைகளில் அதிகாரிகள் ஒருவர் “தலைமறைவு” என்று பதிவு செய்யலாம்.

இவ்வாறு தலைமறைவு நிலை வழங்கப்பட்டது பிரான்ஸ் புகலிட வழக்கு ஐ உடனடியாக செயல்முறை செய்யாமல் 18 மாதங்கள் வரை அந்த நபரை மாற்ற முயற்சிக்க முடியும். ஆனால் ஒருவரை abscond என்று அறிவிக்க அதிகாரிகளிடம் சரியான காரணமும் ஆதாரமும் இருக்க வேண்டும்.

வெறும் ஒரு சந்திப்பு தவறியதற்காக மட்டும் எல்லா நேரங்களிலும் தலைமறைவானது என்று சட்டப்படி கருத முடியாது என்றும் சில பிரெஞ்சு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.

இந்த 18 மாத பரிமாற்றம் நடைபெறவில்லை என்றால் பல இடங்களில் பிரான்ஸ் தானே தஞ்சம் விண்ணப்பத்துக்கு பொறுப்பான நாடாக மாற வாய்ப்பு உள்ளது.

அதனால் டப்ளின் நடைமுறையில் இருப்பவர்கள் முகவரி மாற்றங்களை சரியாக தெரிவிப்பது நியமனங்களை தவறவிடாமல் செல்வது மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பை வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பிரச்சினை முடிந்த பின்னர் OFPRA file தரப்படும். OFPRA application பொதுவாக GUDA registration பிறகு 21 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய குறிப்பு

2026 ஜூன் 12 முதல் ஐரோப்பிய ஒன்றியம் புதிய EU Pact on Migration and Asylum”நடைமுறையை முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய அமைப்பின் முக்கிய சட்டமாக Asylum and Migration Management Regulation (AMMR) அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது தற்போது பயன்படுத்தப்படும் Dublin III Regulation-ஐ மாற்றும் புதிய நடைமுறையாகும்.

பழைய Dublin விதிமுறையின் கீழ் ஒருவர் முதலில் எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் fingerprint கொடுத்தாரோ அல்லது asylum பதிவு செய்தாரோ பொதுவாக அந்த நாடே asylum விண்ணப்பத்தை பரிசீலிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

இதனால் Italy, Greece, Spain போன்ற எல்லை நாடுகளுக்கு அதிகமான asylum burden ஏற்பட்டதாக பல ஆண்டுகளாக விமர்சனங்கள் எழுந்தன இந்த பிரச்சினையை சமாளிக்கவும் asylum responsibility-ஐ EU நாடுகளுக்குள் புதிய முறையில் பகிரவும் இந்த புதிய EU Pact உருவாக்கப்பட்டது.

புதிய AMMR நடைமுறையிலும் first country of entry என்ற அடிப்படை விதி முழுமையாக நீக்கப்படவில்லை. அதாவது ஒருவர் முதலில் எந்த EU நாட்டில் fingerprint கொடுத்தாரோ அந்த நாடு இன்னும் முக்கிய பொறுப்புடைய நாடாகவே கருதப்படும்.

ஆனால் புதிய அமைப்பில் EU நாடுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் biometric data sharing மற்றும் transfer coordination ஆகியவை மேலும் கடுமையாக்கப்படுகின்றன.

குறிப்பாக புதிய Eurodac system மூலம் fingerprint மட்டும் அல்லாமல் facial image போன்ற biometric தகவல்களும் சேகரிக்கப்படலாம். இதனால் ஒருவர் எந்த நாட்டில் பதிவு செய்தார் எந்த நாட்டில் asylum கேட்டார் என்பதைக் EU அதிகாரிகள் வேகமாக கண்டறிய முடியும்.

இந்த புதிய pact கீழ் border procedure மற்றும் detention-like screening நடைமுறைகளும் அதிகமாக பயன்படுத்தப்படலாம். சில asylum seekers EU நாட்டுக்குள் முழுமையாக அனுமதிக்கப்படுவதற்கு முன்பே border centres-ல் வைத்துப் பரிசோதிக்கப்படலாம்.

மேலும் safe country என்று EU கருதும் நாடுகளில் இருந்து வரும் சிலரின் asylum விண்ணப்பங்கள் வேகமாக நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் asylum விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை EU வெளியே அனுப்பும் return procedure-களையும் வேகமாக்க EU முயற்சி செய்கிறது.

இத்துடன் Italy அல்லது Greece போன்ற நாடுகளுக்கு மட்டும் burden வராமல் இருக்க asylum seekers ஐ பிற EU நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் solidarity mechanism மும் இந்த pact ல் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் asylum seekers ஐ ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

சில நாடுகள் asylum seekers-ஐ ஏற்காமல் அதற்குப் பதிலாக பண உதவி அல்லது operational support வழங்கியும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றலாம். France உள்ளிட்ட பல EU நாடுகள் இந்த புதிய pact மூலம் asylum மற்றும் Dublin transfer நடைமுறைகள் மேலும் கட்டுப்பாட்டுடன் நடைபெறும் என்று கூறுகின்றன.

ஆனால் மனித உரிமை அமைப்புகள் சிலர் இந்த புதிய அமைப்பு detention border control மற்றும் surveillance ஐ அதிகரிக்கக்கூடும் என்று கவலை வெளியிட்டுள்ளன.

எனவே 2026 முதல் EU asylum system முந்தையதை விட அதிகமாக centralized digitalized மற்றும் stricter control கொண்ட அமைப்பாக மாறும் என்று பார்க்கப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
பிரான்ஸில் எரிபொருள் நிலையத்தில் டீசல் நிரப்பும் வாகனம்
பிரான்ஸில் எரிபொருள் உதவித் திட்டங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
16 Sep 2026
2027 பிரான்ஸ் அதிபர் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பிரான்சுவா ஒலாந்த்
2027 அதிபர் தேர்தல்: சோசலிஸ்ட் கட்சி முதன்மைத் தேர்தலில் பங்கேற்க மாட்டேன் என்கிறார் பிரான்சுவா ஒலாந்த்
16 Sep 2026
பிரான்ஸ் செனட்டில் விசாரணைக்கு ஆஜராகும் முன்னாள் பாரிஸ் மேயர் ஆன் இதால்கோ
குழந்தைகள் பாதுகாப்பில் நிறுவனங்கள் தோல்வியடைந்தன: செனட்டில் ஆன் இதால்கோ ஒப்புதல்
15 Sep 2026
பிரான்ஸ் காவல்துறை ஊதிய கோரிக்கை போராட்டத்தில் பங்கேற்கும் காவலர்கள்
பிரான்ஸ் காவல்துறை ஊதியம்: பதவி வாரியான சம்பள விவரங்கள்
15 Sep 2026
பிரான்ஸ் HLM சமூக வீடுகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள்
பிரான்ஸ் சமூக வீடுகளில் வெளிநாட்டினரின் உண்மையான பங்கு என்ன?
15 Sep 2026
பாரிஸில் போராட்டத்துக்கு கூடும் பிரான்ஸ் காவல்துறையினர்
பிரான்ஸ் காவல்துறையினர் ஊதியம், பணிச்சூழலுக்காக இன்று போராட்டம்
15 Sep 2026
Oasis performing at Stade de France in Paris
அடுத்த ஆண்டு பாரிஸில் இரண்டு இசை நிகழ்ச்சிகள்: ஓயாசிஸ் அறிவிப்பு
15 Sep 2026
ஐரோப்பிய விமான நிலையத்தில் பயணிகளுக்கான கைரேகை எல்லைக் கட்டுப்பாடு
ஐரோப்பாவில் எல்லைக் கைரேகைச் சோதனை: 9 நாடுகள் தாமதம்
15 Sep 2026
இலங்கை செய்திகள்
கொழும்பு மட்டக்குளியில் இடம்பெற்ற பல வாகன விபத்து
மட்டக்குளியில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம்
16 Sep 2026
கொழும்பு மட்டக்குளியில் விபத்துக்குள்ளான வாகனங்கள்
மட்டக்குளியில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
16 Sep 2026
இலங்கை நெல் வயலில் வைக்கோல் குவியல்களை பார்வையிடும் விவசாயிகள்
வைக்கோல் எரிப்பு விவகாரத்தில் அமைச்சர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
16 Sep 2026
கொழும்பில் புதிய மெட்ரோ பேருந்து வழித்தடங்களை காட்டும் நகர்ப்புற போக்குவரத்து காட்சி
செப்டம்பர் இறுதியில் விரிவடையும் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை
16 Sep 2026
இலங்கையில் வேலைநிறுத்தத்துக்கு முன் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்
இலங்கையில் ரயில்வே தொழிற்சங்கங்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் நள்ளிரவு தொடக்கம்
16 Sep 2026
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய இதய சிகிச்சைப் பிரிவு கட்டுமான தொடக்க நிகழ்வு
திருகோணமலை வைத்தியசாலையில் ரூ.2,403 மில்லியன் செலவில் இதய சிகிச்சைப் பிரிவு கட்டுமானம் தொடக்கம்
16 Sep 2026
நுகேகொடையில் போக்குவரத்து நெரிசலால் நிறைந்த சாலை
நுகேகொட போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொது வாகன நிறுத்தத் திட்டம்: பிரதமர் வலியுறுத்தல்
16 Sep 2026
இலங்கையின் ஆடைத் தொழிற்சாலை மற்றும் ஏற்றுமதி உற்பத்தி நடவடிக்கைகள்
இலங்கை ஆடைத் துறை ஏற்றுமதியை 8 பில்லியன் டொலராக உயர்த்த JAAFSL இலக்கு
16 Sep 2026
சினிமா செய்திகள்
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 20-வது திருமண நாள் கொண்டாட்டம்
சூர்யா–ஜோதிகாவின் 20-வது திருமண நாள்: கொண்டாட்டப் புகைப்படங்கள் பகிர்வு
16 Sep 2026
தமிழ் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பான திரையுலக செய்திகள்
ரஜினி பாராட்டில் சூரி மகிழ்ச்சி; த்ரிஷாவுக்கு அம்பிகா அறிவுரை
15 Sep 2026
ரியோ மற்றும் சானியா ஐயப்பன் நடித்த மேடி திரைப்பட படப்பிடிப்பு நிறைவு
ரியோ நடித்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
15 Sep 2026
எம்மி விருது விழாவில் பாப் ஹோப் மனிதநேய விருது பெற்ற மைக்கேல் ஜே. ஃபாக்ஸ்
எம்மி விழாவில் பார்கின்சன் நோய் குறித்த உருக்கமான பேச்சு: கௌரவிக்கப்பட்ட மைக்கேல் ஜே. ஃபாக்ஸ்
15 Sep 2026
‘மண்டாடி’ படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சூரி
‘மண்டாடி’ படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்: நெகிழ்ந்த சூரி
15 Sep 2026
கிறிஸ் ராக் ஆஸ்கர் விழாவுக்கு திரும்புவது குறித்து பேசுகிறார்
ஒரே நிபந்தனையில் மட்டுமே ஆஸ்கர் விழாவுக்கு திரும்புவேன்: கிறிஸ் ராக்
15 Sep 2026
தி கிராண்ட் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தாயும் மகனும்
சமூக விழிப்புணர்வை பேசும் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
14 Sep 2026
விஜய் சேதுபதி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி சர்ச்சை
விஜய் சேதுபதி பேச்சு சர்ச்சை: விஜய் டிவி நிர்வாகம் விளக்கம்
14 Sep 2026

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading