ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் வேலை இழப்பு உதவித்தொகை (Allocation chômage) மறுமதிப்பீடு செய்யப்படுவது வழக்கமாக இருந்தாலும், இந்த ஆண்டு அதற்கான உயர்வை வழங்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் தற்போது வேலை இழப்பு உதவித்தொகை பெற்று வரும் இலட்சக்கணக்கான பயனாளர்கள் கடந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அதே தொகையையே தொடர்ந்து பெறுவார்கள். பணவீக்கம் காரணமாக அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




























