France Tamil News,
பிரான்சில் CDI (Contrat à Durée Indéterminée) நிரந்தர வேலை ஒப்பந்தத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் வேலை ஒப்பந்தத்தை முடிக்கும் நடைமுறையான Rupture Conventionnelle தொடர்பாக புதிய சட்ட மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தின் படி Rupture Conventionnelle மூலம் பணியை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை இழப்பு உதவித்தொகை (Allocation Chômage) பெறும் அதிகபட்ச காலம் குறைக்கப்படுகிறது.
தற்போது 55 வயதிற்குக் குறைவான ஊழியர்கள் அதிகபட்சமாக 18 மாதங்கள் வரை chômage உதவித்தொகை பெற முடிகிறது. ஆனால் 2026 செப்டம்பர் 1 முதல் இந்த காலம் 15 மாதங்களாக குறைக்கப்படும். அதேபோல் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது வயதைப் பொறுத்து 22.5 மாதங்கள் முதல் 27 மாதங்கள் வரை உதவித்தொகை வழங்கப்பட்டாலும் புதிய விதிகளின் கீழ் அது 20.5 மாதங்களாக குறைக்கப்படுகிறது.
France Tamil News பிரான்சின் வெளிநாட்டு பிரதேசங்களில் (Outre-mer) வசிப்பவர்களுக்கும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மயோட் (Mayotte) தவிர்ந்த மற்ற வெளிநாட்டு பிரதேசங்களில் 55 வயதிற்குக் குறைவானவர்களுக்கு 20 மாதங்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 மாதங்கள் வரை chômage உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





Leave a Reply