ஸ்கொட்லாந்தில் தொடரும் புயல் பாதிப்புகள்
ஸ்கொட்லாந்தின் பல பகுதிகளில் பலத்த காற்றும் கனமழையும் தொடர்ந்து வருவதால், பயணத் தடைகள் நீடிக்கின்றன. Edinburgh, Glasgow, Inverness மற்றும் Aberdeen விமான நிலையங்களில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Edinburgh விமான நிலையத்தில் மட்டும் 81 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 11 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
Queensferry Crossing பாலம் உயரமான வாகனங்களுக்கு மூடப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததால் ரயில் பாதைகளிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது. Northern Ireland-ல் சுமார் 350 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; அவற்றில் பெரும்பாலானவை விழுந்த மரங்கள், கிளைகள் மற்றும் சாலைகளில் தேங்கிய நீர் தொடர்பானவை.
ஸ்கொட்லாந்தின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கடும் காற்று, கடலோர வெள்ளம் மற்றும் மின்தடை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மணிக்கு 70 மைலுக்கு மேல் காற்றின் வேகம் பதிவானது. Storm Boelo UK பாதிப்புகள் குறையத் தொடங்கினாலும், வரும் நாட்களில் மீண்டும் மோசமான வானிலை ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.




























