உதவித்தொகை நிறுத்தப்படுவதற்கு முன் அல்லது அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபருக்கு தனது விளக்கத்தையும் ஆதாரங்களையும் சமர்ப்பிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பு கிடைத்த 2 வாரங்களுக்குள் மறுபரிசீலனை கோர முடியும். மேலும் குடும்பத்தின் அன்றாட செலவுகளுக்குத் தேவையான அடிப்படை வருமானம் முற்றிலும் பாதிக்கப்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வேலை இழப்பு உதவித்தொகையைப் பெறுபவர்கள் பிரான்ஸ் அல்லது SEPA வங்கி கணக்கை பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பயனாளியின் வங்கி விபரங்கள் குடியிருப்பு நிலை மற்றும் பிற தகவல்களை France Travail அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகளின் மூலம் சரிபார்க்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. Europe News
மேலும் சட்டவிரோத வருமானத்துடன் வேலை இழப்பு உதவித்தொகையை ஒரே நேரத்தில் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. மோசடியாக அல்லது தவறான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட உதவித்தொகைகளை France Travail நிர்வாக நடவடிக்கைகள் மூலம் மீட்டெடுக்கும் அதிகாரமும் இந்த புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.




























