சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

வெளிநாட்டு வேலை பதிவு / புதுப்பிப்பு – முழுமையான வழிகாட்டி 2026

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் அனைவரும் கட்டாயமாக Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE) இல் பதிவு செய்ய வேண்டும். இது சட்டபூர்வமான பாதுகாப்பையும் காப்புறுதி நன்மைகளையும் அவசர உதவிகளையும் வழங்குகிறது. வெளிநாட்டு வேலை ஒப்பந்தம் விசா மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக SLBFE முக்கிய பாதுகாப்பு அமைப்பாக செயல்படுகிறது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் இலங்கையர்களுக்கு SLBFE பதிவு மிகவும் அவசியமானதாகும். இந்த பதிவின் மூலம் தொழிலாளர்கள் சட்டபூர்வமான பாதுகாப்பையும் அரசாங்க அங்கீகாரத்தையும் பெறுகின்றனர்.

SLBFE பதிவு ஏன் அவசியம்?

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பதிவு மிகவும் அவசியமானதாகும். இந்த பதிவின் மூலம் தொழிலாளர்கள் சட்டபூர்வமான பாதுகாப்பையும் அரசாங்க அங்கீகாரத்தையும் பெறுகின்றனர்.

  • இலவச காப்புறுதி பாதுகாப்பு
  • அவசர கால உதவி
  • சட்ட உதவி
  • வெளிநாட்டு வேலை ஒப்பந்த பாதுகாப்பு
  • இறப்பு / விபத்து நிவாரணம்
  • குடும்ப நலத்திட்ட உதவிகள்
  • குழந்தைகளுக்கான scholarship திட்டங்கள்

போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகின்றன பதிவு செய்யாதவர்களுக்கு இந்த பாதுகாப்புகள் கிடைக்காது.

முதன்முறையாக வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புதிய பதிவு (New Registration) செய்ய வேண்டும்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

தேவையான ஆவணங்கள்
  • குறைந்தது 6 மாத validity உள்ள கடவுச்சீட்டு
  • செல்லுபடியாகும் வேலை விசா அல்லது entry permit
  • வேலை ஒப்பந்தம் (Service Agreement)
  • வேலை அனுபவச் சான்று / பயிற்சி சான்று
  • SLBFE பயிற்சி சான்று (தேவைப்பட்டால்)
  • 45 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு – குடும்ப பின்னணி அறிக்கை (Family Background Report)
  • Jordan நாட்டுக்கு செல்லுபவர்கள் Insurance Certificate சமர்ப்பிக்க வேண்டும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் நபர்களுக்கு SLBFE குறிப்பிட்ட வயது வரம்புகளை நிர்ணயித்துள்ளது. பொதுவாக அனைத்து நாடுகளுக்கும் வேலைக்காக செல்ல குறைந்தபட்ச வயது 18 ஆகும். ஆனால் வீட்டு வேலை (Domestic Worker / Housemaid) பணிக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு தனிப்பட்ட வயது வரம்புகள் நடைமுறையில் உள்ளன.

  • சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் குறைந்தது 25 வயதாவது இருக்க வேண்டும்.
  • மற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய கிழக்கு அல்லாத நாடுகளுக்கு வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும்.

இந்த வயது வரம்புகள் வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டுள்ளன.

வேலை அனுபவத் தேவைகள்

வெளிநாட்டு வேலைக்காக பதிவு செய்யும் போது சில வேலை அனுபவத் தேவைகளும் SLBFE மூலம் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக வீட்டு வேலை (Domestic Worker) வேலைகளுக்காக செல்லும் பெண்கள் குறைந்தது 150 நாட்கள் வெளிநாட்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆண்கள் அல்லது வீட்டு வேலை அல்லாத (Non-domestic) தொழில்களில் பணிபுரிய செல்லும் நபர்கள் குறைந்தது 30 நாட்கள் தொடர்புடைய வேலை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த அனுபவங்கள் வேலைவாய்ப்பு பாதுகாப்பையும் தொழில்திறன் உறுதிப்படுத்தலையும் கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்படுகின்றன.

SLBFE புதிய பதிவு கட்டணம் 2026

2026ஆம் ஆண்டிற்கான SLBFE புதிய பதிவு கட்டணம் ரூ. 22,027 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் அடிப்படை பதிவு கட்டணமான ரூ.18,200 உடன் 18% VAT மற்றும் 2.5% SSCL வரியும் சேர்க்கப்பட்டுள்ளன.

  • முதன்முறையாக வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் நபர்கள்
  • ஏற்கனவே வேலை செய்த employer-ஐ மாற்றி புதிய employer கீழ் பணிக்குச் செல்லுபவர்கள்
  • மேலும் Tourist visa மூலம் வெளிநாட்டுக்கு சென்று பின்னர் Work visa பெற்றவர்கள் ஆகியோருக்கு இந்த புதிய பதிவு கட்டணம் பொருந்தும்.
SLBFE புதுப்பிப்பு (Renewal) கட்டணம்

ஏற்கனவே SLBFE பதிவை பெற்றுள்ளவர்கள் அதே employer கீழ் மீண்டும் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் போது Renewal (புதுப்பிப்பு) செய்ய வேண்டும். இதற்காக

  • குறைந்தது 6 மாத validity உள்ள கடவுச்சீட்டு
  • Re-entry visa, Pre-registration visa ஆகிய ஆவணங்கள் அவசியமாகும்.
  • குறிப்பாக சவூதி அரேபியாவுக்கு மீண்டும் செல்லும் தொழிலாளர்கள் Iqama copy-யும் சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் அதே employer கீழ் தொடர்ந்தும் பணிபுரிகிறார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களும் வழங்கப்பட வேண்டும்.

இந்த Renewal பதிவு கட்டணம் ரூ. 4,599 ஆகும். இதில் அடிப்படை கட்டணம் ரூ.3,800 அதற்கு மேலாக VAT 18% மற்றும் SSCL 2.5% சேர்க்கப்பட்டுள்ளன.

Online மூலம் பதிவு செய்வது எப்படி?

SLBFE தற்போது online self-registration வசதியையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் வெளிநாட்டு வேலைக்காக செல்லும் நபர்கள் வீட்டிலிருந்தபடியே பதிவு செயல்முறையை ஆரம்பிக்க முடியும்.

  • முதலில் SLBFE Online portal-ல் account உருவாக்க வேண்டும்.
  • அதன் பின்னர் தேவையான ஆவணங்களை upload செய்து
  • Online payment செலுத்த வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் பின்னர் அருகிலுள்ள SLBFE அலுவலகத்திற்கு சென்று original documents ஐ காட்டி சரிபார்ப்பு செய்ய வேண்டியிருக்கும். இதற்காக SLBFE Online Services portal மற்றும் SLBFE Payment Portal பயன்படுத்தப்படுகின்றன. SLBFE பதிவு பொதுவாக 2 வருடங்கள் அல்லது வேலை ஒப்பந்தத்தின் காலத்திற்கு செல்லுபடியாக இருக்கும். அதன் பின்னர் வெளிநாட்டு வேலை தொடர வேண்டுமெனில் Renewal செய்ய வேண்டும்.

பதிவு செய்யாமல் சென்றால் என்ன ஆகும்?

SLBFE பதிவு இல்லாமல் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றால்

  • காப்புறுதி கிடையாது
  • சட்ட உதவி கிடையாது
  • compensation பெற முடியாது
  • வேலை பிரச்சினைகளில் அரச உதவி குறையும்

எனவே சட்டப்படி பதிவு செய்வது மிகவும் முக்கியம்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்