ஜெர்மனியின் Opportunity Card (Chancenkarte) விசா விண்ணப்ப நடைமுறை தற்போது முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. 2026 மே 18 முதல் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜெர்மன் தூதரகங்களிலும் இந்த புதிய டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், முன்னர் இருந்த நீண்ட appointment காத்திருப்பு பிரச்சினைகள் மற்றும் நேரடி ஆவண சமர்ப்பிப்பு சிக்கல்கள் குறையும் என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தற்போது ஜெர்மனியின் அதிகாரப்பூர்வ Consular Services Portal மூலம் வீட்டிலிருந்தே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
புதிய டிஜிட்டல் நடைமுறை எப்படி செயல்படும்?
- Online portal-ல் விண்ணப்பப் படிவம் நிரப்ப வேண்டும்
- Passport, qualification, financial proof போன்ற ஆவணங்களை upload செய்ய வேண்டும்
- அதிகாரிகள் முதலில் ஆன்லைனில் ஆவணங்களை சரிபார்ப்பார்கள்
- அதன் பிறகு மட்டுமே biometric மற்றும் identity verification க்காக embassy appointment வழங்கப்படும்
இதனால் தேவையற்ற embassy visits குறையும் என கூறப்படுகிறது.
Opportunity Card என்றால் என்ன?
Opportunity Card (Chancenkarte) என்பது non-EU நாடுகளைச் சேர்ந்த திறமையான நபர்கள் ஜெர்மனிக்கு வேலை தேடச் செல்ல அனுமதிக்கும் visa/residence permit ஆகும். இதன் மூலம்
- Job offer இல்லாமலே ஜெர்மனிக்கு செல்லலாம்
- ஒரு வருடம் வரை வேலை தேடலாம்
- வாரத்திற்கு 20 மணி நேரம் part-time வேலை செய்யலாம்
- Trial jobs செய்ய அனுமதி உள்ளது
வேலை கிடைத்த பிறகு EU Blue Card அல்லது வேலை விசாவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
முக்கிய தகுதிகள்
- அங்கீகரிக்கப்பட்ட degree அல்லது vocational qualification
- German A1 அல்லது English B2 மொழித்திறன்
- Points system-ல் தேவையான மதிப்பெண்கள்
- வாழ்க்கைச் செலவுக்கான நிதி ஆதாரம்
அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளம்
ஜெர்மனியின் அதிகாரப்பூர்வ Opportunity Card portal German Opportunity Card Portal





Leave a Reply