France Tamil News, பிரான்சில் 2026 ஜூலை 1 முதல் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய பொருளாதார பகுதி மற்றும் சுவிட்சர்லாந்து அல்லாத நாடுகளைச் சேர்ந்த சில வெளிநாட்டு மாணவர்களுக்கு APL வீட்டு உதவி வழங்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சமூக அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறாத extra-européens மாணவர்கள் இனி APL வீட்டு உதவியை பெற முடியாது என்று Service-Public அறிவித்துள்ளது. இந்த மாற்றம் 2026 ஜூன் 28 அன்று Journal officiel-ல் வெளியிடப்பட்ட décret அடிப்படையில் அமலுக்கு வந்துள்ளது.
ஆனால், France Tamil News வேலை செய்கின்ற மாணவர்கள் apprenticeship அல்லது professionnalisation ஒப்பந்தத்தில் உள்ள மாணவர்கள் இந்த உதவிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் அகதி அந்தஸ்து பெற்ற மாணவர்கள் நாடற்றவர்கள் மற்றும் extra-européens மாணவர்களின் துணைவர்கள் தொடர்ந்து APL உதவியை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply