TPS என்பது நிரந்தர குடியேற்ற திட்டமல்ல தற்காலிக பாதுகாப்பிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட திட்டம் என வலியுறுத்தினார். மேலும் தன்னார்வமாக நாடு திரும்ப விரும்புவோருக்கு விமானப் பயணச் செலவுடன் சுமார் 2,100 அமெரிக்க டொலர் மறுகுடியேற்ற உதவியும் வழங்கப்படும் என கூறினார்.
இந்த அறிவிப்பு ஹெய்டி மற்றும் சிரியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கானோரின் TPS பாதுகாப்பை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் நிர்வாகத்துக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி வழங்கியதையடுத்து வெளியாகியுள்ளது.




























