பிரான்சில் தங்கள் நாட்டிற்கு திரும்பினால் உயிர் அச்சம், அரசியல் துன்புறுத்தல், மத அடக்குமுறை, இன அடிப்படையிலான தாக்குதல், போர் சூழல் அல்லது மனித உரிமை மீறல்கள் ஏற்படும் அபாயம் இருப்பவர்கள் அகதி (Asylum) பாதுகாப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முக்கிய பிரான்ஸ் அரசு அமைப்பு Office français de protection des réfugiés et apatrides (OFPRA) ஆகும்.

பிரான்சில் அகதி விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் முதலில் SPADA (Structure de Premier Accueil des Demandeurs d’Asile) எனப்படும் முதற்கட்ட வரவேற்பு அமைப்பை தொடர்புகொள்ள வேண்டும். இந்த அமைப்பு உங்களுக்கான GUDA (Guichet Unique pour Demandeurs d’Asile) நேரத்தை ஏற்பாடு செய்து தரும்.

பாரிஸ் மற்றும் Île-de-France பகுதியில் இருப்பவர்கள் முதலில் Office français de l’immigration et de l’intégration (OFII) அலுவலகத்தை 01 42 500 900 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் (தம்பதி கணவன்-மனைவி குழந்தைகள்) பிரான்சில் இருந்தால் உங்கள் அகதி விண்ணப்பம் குடும்ப விண்ணப்பம் (Family Application) ஆக கருதப்படும். அதனால் பிரான்சில் வசிக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் SPADA அலுவலகத்திற்கு உங்களுடன் வர வேண்டும். அவர்கள் ஏற்கனவே குடியிருப்பு அனுமதி வைத்திருந்தாலும் கூட வருவது அவசியமாகும்.

Forum Réfugiés போன்ற அமைப்புகள் முதலில் பிரான்சில் அகதி விண்ணப்ப நடைமுறை பற்றி உங்களுக்கு விளக்கம் அளிக்கும். பின்னர் உங்கள் பெயர், வயது, குடும்ப நிலை போன்ற தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படும்.

நீங்கள் எந்த தேதியில் உங்கள் நாட்டை விட்டு வெளியேறினீர்கள் எப்போது பிரான்சுக்கு வந்தீர்கள் என்பதையும் கேட்பார்கள். இதில் கவனமாக பதிலளிக்க வேண்டும்.

நீங்கள் 90 நாட்களுக்கு முன்பே பிரான்சுக்கு வந்ததாக கூறினால் உங்கள் விண்ணப்பம் “Fast-Track Procedure” (Procédure Accélérée) எனப்படும் விரைவு நடைமுறைக்கு மாற்றப்படலாம். இது பல சமயங்களில் விண்ணப்பதாரருக்கு எதிராகவே அமையும் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.

மேலும் நீங்கள் பிரான்சுக்கு வர எந்த வழித்தடம் பயன்படுத்தினீர்கள் எந்த மொழியில் முழு அகதி நடைமுறையையும் தொடர விரும்புகிறீர்கள் என்பதையும் கேட்பார்கள்.

அகதி விண்ணப்பத்திற்காக பயன்படுத்த வேண்டிய Email முகவரியும் கேட்கப்படும். உங்களிடம் Email இல்லையெனில் SPADA அதனை உருவாக்க உதவி செய்யும். இந்த தகவல்கள் அனைத்தும் prefecture (பிரான்ஸ் நிர்வாக அலுவலகம்) உடன் பகிரப்படும் வகையில் கணினி அமைப்பில் பதிவு செய்யப்படும்.

தவறான தகவல் போலியான அடையாளம் அல்லது வேறு பெயர் கொடுத்தால் OFII அதனை கண்டறிந்தால் உங்கள் விண்ணப்பம் “Fast-Track Procedure” க்கு மாற்றப்படலாம். அப்படியானால் தங்குமிடம் மற்றும் நிதி உதவி பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.

பின்னர் GUDA (Central Asylum Claim Desk) அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அழைப்புக் கடிதம் (Convocation) உங்களுக்கு வழங்கப்படும். அங்கு உங்கள் அகதி விண்ணப்பம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படும். GUDA சந்திப்புக்குப் பிறகு மீண்டும் Forum Réfugiés அலுவலகத்திற்கு வருவதற்கான appointment-ஐயும் அவர்கள் வழங்குவார்கள்.

  • தனிப்பட்ட தகவல்கள்
  • பிரான்ஸ் வந்த தேதி முக்கியம் (90 நாட்களுக்குள் இருக்க வேண்டும்)
  • பயண பாதை விவரம்
  • மொழி தேர்வு
  • Email முகவரி அவசியம்

GUDA மையத்தில் உங்கள் விரல் ரேகை (fingerprints) எடுக்கப்படும். பின்னர் பிரான்ஸ் உங்கள் அகதி விண்ணப்பத்தை பரிசீலிக்க பொறுப்பான நாடா என்பதை Dublin Procedure அடிப்படையில் அதிகாரிகள் சரிபாரிப்பார்கள்.

பிரான்ஸ் பொறுப்பான நாடாக இருந்தால், உங்களுக்கு “Attestation de demande d’asile” (Asylum Application Certificate) வழங்கப்படும். இது ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாக இருக்கும்.

GUDA (Guichet Unique pour Demandeurs d’Asile) சந்திப்பிற்கான அனைத்து தகவல்களும் உங்கள் appointment notification letter ல் இருக்கும். அதில் prefecture முகவரி தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். நேரத்திற்கு சரியாக செல்லுவது மிகவும் முக்கியம். தாமதமாக சென்றால் உங்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பலாம். அங்கு குறைந்தது அரை நாள் அல்லது முழு நாள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

GUDA வில் நீங்கள் இரண்டு பிரிவினரைக் சந்திக்க வேண்டும். முதல் அதிகாரி prefecture இல் இருந்து வருபவர் இவர் உங்கள் அகதி விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வார். இரண்டாவது அதிகாரி OFII (Office Français de l’Immigration et de l’Intégration) அமைப்பைச் சேர்ந்தவர்.

இவர் உங்கள் உடல்நிலை தங்குமிடம் மற்றும் பாதிப்பு நிலை (vulnerability) குறித்து interview நடத்துவார். இந்த இரண்டு சந்திப்புகளும் தனித்தனியாக நடைபெறும். Prefecture அதிகாரியையும் OFII அதிகாரியையும் சந்திக்காமல் வெளியேறக் கூடாது.

Prefecture மற்றும் OFII வழங்கும் அனைத்து ஆவணங்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அவற்றை புகைப்படம் எடுத்து photocopy செய்து paper மற்றும் digital வடிவங்களில் பல இடங்களில் சேமித்து வைத்திருக்க வேண்டும்.

அகதி நடைமுறை என்பது தங்கள் சொந்த நாட்டில் ஆபத்தில் உள்ளவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறையாகும். ஆனால் உடல்நலப் பிரச்சினை குடும்ப இணைப்பு போன்ற காரணங்களுக்காக residence permit விண்ணப்பமும் செய்ய முடியும்.

அகதி விண்ணப்பத்துடன் residence permit விண்ணப்பத்தையும் தொடங்க விரும்பினால் GUDA சென்ற நாளிலிருந்து 2 மாதங்களுக்குள் அதை செய்ய வேண்டும். அந்த காலக்கெடு கடந்தால் prefecture உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்.

GUDA-வில் அகதி விண்ணப்பத்தை பதிவு செய்யும் அதிகாரி முதலில் உங்கள் fingerprints எடுப்பார். பின்னர் நீங்கள் ஏற்கனவே பிரான்சில் அல்லது வேறு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் அகதி விண்ணப்பம் செய்துள்ளீர்களா என்பதை சரிபார்ப்பார். உங்கள் மொழியில் asylum guide ஒன்றும் வழங்கப்படும்.

மேலும் முழு நடைமுறையிலும் பயன்படுத்த வேண்டிய மொழியை தேர்வு செய்யச் சொல்வார்கள். நீங்கள் தேர்வு செய்த மொழியை பின்னர் மாற்றுவது கடினமாக இருக்கும். ஆனால் எந்த நேரத்திலும் பிரெஞ்சு மொழியில் பேசும் உரிமை உங்களுக்கு இருக்கும்.

பின்னர் உங்கள் அகதி விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதற்கான récépissé எனப்படும் சான்றிதழ் வழங்கப்படும். அதில் உங்கள் விண்ணப்பம் எந்த நடைமுறையில் பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிடப்படும். அது normal procedure, fast-track procedure அல்லது Dublin procedure ஆக இருக்கலாம். அதோடு OFPRA file ஒன்றும் வழங்கப்படும் அதை சரியாக நிரப்புவது மிகவும் முக்கியம்.

2022 மே 2க்கு பிறகு GUDA சென்றவர்கள் OFPRA online account-க்கு login ID மற்றும் password பெறுவார்கள். இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட OFPRA online space-ஐ அணுகலாம்.

புதிய asylum seekers-களுக்கான OFPRA ஆவணங்கள் அனைத்தும் தற்போது digital முறையில் வழங்கப்படுகின்றன. உங்கள் file reception notice appointment date மற்றும் asylum decision போன்றவை அனைத்தும் online account-ல் மட்டுமே வரும். இனி அஞ்சல் மூலம் கடிதங்கள் அனுப்பப்படமாட்டாது.

SPADA அமைப்பு உங்கள் முதல் login மற்றும் online account பயன்பாட்டிற்கு உதவி செய்யும். முக்கியமாக, OFPRA online space-ல் வரும் கடிதங்களை திறந்து பார்ப்பது மிகவும் அவசியம். நீங்கள் அவற்றை படிக்காவிட்டாலும், 15 நாட்களுக்கு பிறகு OFPRA நீங்கள் அதை பார்த்துவிட்டீர்கள் என கருதும். பின்னர் எனக்கு தகவல் தெரியவில்லை என்று கூற முடியாது.

  • Appointment Letter முக்கியம்
  • நேரத்திற்கு செல்ல வேண்டும்
  • இரண்டு அதிகாரிகளை சந்திக்க வேண்டும் (Prefecture மற்றும் OFII இருவரையும் சந்திக்காமல் வெளியேறக் கூடாது)
  • Residence Permit விண்ணப்பத்திற்கு (Photo, photocopy மற்றும் digital copy வைத்துக்கொள்ள வேண்டும். )
  • Fingerprints எடுக்கப்படும் (மற்ற EU நாட்டில் asylum கேட்டீர்களா என சரிபாரிப்பார்கள்)
  • மொழி தேர்வு செய்ய வேண்டும்
  • Récépissé வழங்கப்படும்
  • OFPRA File வழங்கப்படும்
  • OFPRA Online Account (அனைத்து தகவலும் Online-ல் வரும்)

OFII மற்றும் Domiciliation நடைமுறை – பிரான்சில் அகதி விண்ணப்பம்

OFII (Office Français de l’Immigration et de l’Intégration) என்பது பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும். இந்த அமைப்பு பிரான்சில் அகதி விண்ணப்பதாரர்களை வரவேற்பது தங்குமிடம் நிதி உதவி மற்றும் முழு asylum நடைமுறையிலும் ஆதரவு வழங்குவது போன்ற பொறுப்புகளை மேற்கொள்கிறது.

அதிகாரி உங்கள் தனிப்பட்ட நிலைமை குறித்து கேள்விகள் கேட்பார். நீங்கள் கர்ப்பிணி, உடல்நலக்குறைவு, மாற்றுத்திறனாளி, மனஅழுத்தம் அல்லது உளவியல் உதவி தேவைப்படுபவர் என்றால் அதனை நேர்மையாக தெரிவிக்க வேண்டும்.

பின்னர் Offer of support from the national reception centre என்ற படிவம் வழங்கப்படும். இந்த படிவத்தில் oui j’accepte de bénéficier des conditions matérielles d’accueil (ஆம் வழங்கப்படும் வசதிகளை ஏற்கிறேன்) என்ற பெட்டியில் குறி வைத்து கையொப்பமிட்டால் accommodation மற்றும் ADA financial allowance பெற முடியும்.

நீங்கள் accommodation வேண்டாம் என்று முடிவு செய்தாலும் ADA நிதி உதவி மட்டும் பெறலாம். ஆனால் அதை GUDA-வில் முதல் நாளிலேயே தெரிவிக்க வேண்டும். நீங்கள் accommodation கேட்டுவிட்டு பின்னர் வழங்கப்பட்ட இடத்தை மறுத்தால், accommodation மட்டுமல்ல ADA நிதி உதவியும் இழக்க நேரிடும்.

OFII நீங்கள் asylum விண்ணப்பித்த பகுதியிலிருந்து வேறு region-ல் accommodation வழங்கலாம். அங்கு செல்ல transport ticket மற்றும் முகவரி வழங்கப்படும். பொதுவாக 5 நாட்களுக்குள் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். asylum நடைமுறை முழுவதும் அந்த பகுதியிலேயே தங்க வேண்டியிருக்கும். accommodation offer-ஐ மறுத்தால் accommodation மற்றும் ADA இரண்டையும் பெற முடியாது.

SPADA Domiciliation (அஞ்சல் முகவரி பதிவு)

Domiciliation என்பது நீங்கள் கடிதங்கள் பெற பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ அஞ்சல் முகவரியாகும். இது உங்கள் வீட்டுமுகவரி அல்ல. OFPRA மற்றும் CNDA போன்ற அமைப்புகள் அனுப்பும் அனைத்து கடிதங்களும் இந்த முகவரிக்கு வரும். asylum நடைமுறைக்கான அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் இதே முகவரி பயன்படுத்தப்படும்.

இந்த domiciliation, asylum application attestation-ஐ prefecture-ல் புதுப்பிக்க மிகவும் அவசியமானதாகும். GUDA-க்கு சென்ற பிறகு முதல் சந்திப்பில் Forum Réfugiés வழங்கிய appointment தேதியில் மீண்டும் SPADA-க்கு செல்ல வேண்டும். அப்போது அவர்கள் உங்களுக்கு domiciliation முகவரியை வழங்குவார்கள்.

Forum Réfugiés அமைப்பு இதன் மூலம் health insurance, transport கட்டண சலுகை, asylum récit (உங்கள் கதை) எழுத உதவி, OFPRA online portal பயன்படுத்துதல் போன்ற சமூக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்கும்.

உங்கள் domiciliation உங்கள் asylum case ஐ கையாளும் prefecture இருக்கும் அதே region-ல் இருக்க வேண்டும். பின்னர் OFII உங்களை வேறு region-க்கு மாற்றினால், உங்கள் domiciliation-மும் அங்கே மாற்றப்படும் accommodation மறுத்தாலும் கூட மாற்றம் செய்யப்படும்.

உங்களுக்கு கடிதம் வந்துள்ளதா என்பதை Forum Réfugiés அலுவலகத்தில் தினமும் புதுப்பிக்கப்படும் number list மூலம் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் உங்கள் phone number இருந்தால் SMS மூலமும் தகவல் தரலாம். மேலும் Forum Réfugiés website-லும் தகவலை பார்க்க முடியும்.

GUDA வழங்கிய OFPRA form ஐ நீங்கள் 21 நாட்களுக்குள் சரியாக நிரப்பி தேவையான அனைத்து ஆவணங்களுடனும் OFPRA க்கு அனுப்ப வேண்டும்.

நீங்கள் பிரான்சில் அகதி அந்தஸ்து கோறுவதற்காக குறிப்பிட்ட காரணங்களுக்கான சரியான விளக்கத்தைக் கொண்ட OFPRA விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் தெளிவாக எழுத வேண்டும். முக்கியமாக பிரஞ்சு மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்

உங்கள் file முழுமையாக இருந்தால் OFPRA confirmation letter அனுப்பும். இந்த கடிதத்தின் மூலம் asylum application certificate-ஐ மேலும் 9 மாதங்களுக்கு புதுப்பிக்க முடியும்.

Certificate புதுப்பிப்பதற்கு சில நாட்கள் ஆகக்கூடும் என்பதால் expiry date வருவதற்கு முன்பே prefecture-க்கு சென்று renewal செய்ய வேண்டும். அதற்காக recent proof of domiciliation எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் asylum certificate காலாவதியான நிலையில் இருந்தால் police identity check நேரத்தில் கைது செய்யப்படும் அபாயமும் இருக்கலாம். மிக அவதானம்,

இதன் பின்னர் குறைந்தது 6 தொடக்கம் 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் OFPRA விலிருந்து உங்களுக்கான விசாரணை அழைப்பு வரும் வரை.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading