காட்கோபர் ரயில் நிலையத்தில் நடந்த வாக்குவாதம்
மும்பை காட்கோபர் சர்வோதயா நகரில் வசிக்கும் ஆர்த்தி, கணவருடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு தனது 9 மாத மகனை அழைத்துக்கொண்டு காட்கோபர் ரயில் நிலையத்துக்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பயணிகள் நடைமேம்பாலத்தில் ஆர்த்தியுடன் ஜாபர் ஷேக் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது குழந்தையை ஆர்த்தியிடமிருந்து ஜாபர் பிடுங்க முயன்றார். ஆர்த்தி குழந்தையை ஒப்படைக்க மறுத்த நிலையில், கோபமடைந்த ஜாபர் குழந்தையை அவரிடமிருந்து பறித்து நடைமேம்பாலத்தில் இருந்து கீழே வீசியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த Mumbai railway bridge baby case சம்பவத்தில் குழந்தைக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்த குழந்தையை ஆர்த்தி ராஜாவாடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். உடல்நிலை மோசமடைந்ததால், அங்கிருந்து சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது. குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
ஜாபர் துணி விற்பனை செய்து வருவதாகவும், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தியைத் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாகவும், இதனால் தம்பதியிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இரவு 10 மணியளவில் நடந்ததால் நடைமேம்பாலத்தில் பயணிகள் குறைவாக இருந்தனர்.





























