அவர்களில் படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மேலும் 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய காயமடைந்த கைதிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவலை ஒருவர் வெளிப்படுத்திய சம்பவமே இந்த மோதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) அங்கு குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.































