ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யேமனின் பிரதான துறைமுக நகரமான ஹொடைடாவிற்கு தென்மேற்கே சுமார் 30 கடல் மைல் (55 கிலோமீட்டர்) தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல் தாங்கள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்து அவசர அபாய எச்சரிக்கையை வெளியிட்டதாக UKMTO குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் யார் தொடர்புடையவர்கள் கப்பலுக்கு ஏற்பட்ட சேதத்தின் தன்மை மற்றும் கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பு நிலை உள்ளிட்ட விடயங்கள் குறித்து சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு ஆயுதக் குழுவும் பொறுப்பேற்காத நிலையில் செங்கடல் கடற்பரப்பில் மீண்டும் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளதாக சர்வதேச கடல்சார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



























