Tag: UKMTO
ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு கடற்பாதை வழியாகச் சென்றபோது இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் கண்காணிப்பு மையமான (UKMTO) இன்று உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் இரண்டு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மிக அருகில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து நேற்று முதன்முதலாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களின் பெயர்கள் அல்லது அவற்றை குறிவைத்த தரப்பு குறித்து UKMTO எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. இதேவேளை ஹோர்முஸ் நீரிணையின் தென்பகுதியில் […]
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை இரவு குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் கணிசமான சேதமடைந்ததாகவும் எனினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஓமானின் லிமா கடற்பகுதிக்குக் கிழக்கே தெற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத […]
யேமன் நாட்டின் செங்கடல் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிகச் சரக்குக் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்களால் திடீரெனத் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரித்தானிய கடற்படையின் கீழ் செயல்படும் யுனைடெட் கிங்டம் மெரிடைம் ட்ரேட் ஆபரேஷன்ஸ் (UKMTO) அமைப்பு இன்று (05) உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யேமனின் பிரதான துறைமுக நகரமான ஹொடைடாவிற்கு தென்மேற்கே சுமார் 30 கடல் மைல் (55 கிலோமீட்டர்) தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு […]