சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு கடற்பாதை வழியாகச் சென்றபோது இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் கண்காணிப்பு மையமான (UKMTO) இன்று உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் இரண்டு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மிக அருகில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து நேற்று முதன்முதலாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களின் பெயர்கள் அல்லது அவற்றை குறிவைத்த தரப்பு குறித்து UKMTO எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. இதேவேளை ஹோர்முஸ் நீரிணையின் தென்பகுதியில் பயணித்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஈரானிய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக அந்த நாடு நேற்றிரவு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) நீர்வழியில் தறிகெட்டு பயணித்த இரண்டு சூப்பர் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது ஈரான் நிர்ணயித்துள்ள வடக்குப் பாதையைப் பயன்படுத்த வேண்டும் என்று தெஹ்ரான் வலியுறுத்தி வரும் நிலையில் அண்மைக்காலமாக அதிகளவிலான கப்பல்கள் ஓமான் கடற்கரைக்கு அண்மைய தெற்கு வழித்தடத்தைத் தேர்வு செய்து பயணித்து வருவது அந்த முக்கிய கடல்வழிப்பாதையின் மீதான ஈரானின் செல்வாக்குக்கு சவாலாக மாறியுள்ளதாக சர்வதேச கடல்சார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்