மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் – அமெரிக்கா மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஓமான் வளைகுடா பகுதியில் அமெரிக்கா விதித்திருந்த கடற்படை தடையை மீறி ஈரானை நோக்கி சென்றதாக கூறப்படும் இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் துல்லியமான தாக்குதலால் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தின் காணொளிகளையும் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (CENTCOM) வெளியிட்டுள்ளது. அமெரிக்க தரப்பின் தகவலின்படி அந்த கப்பல்கள் ஈரான் துறைமுகத்தை அடைய முயன்றதாகவும் அதனால் அவற்றின் இயங்குதிறனை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த ஈரான் இது சர்வதேச சட்டத்தையும் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறும் செயல் என குற்றம்சாட்டியுள்ளது.
இந்த சம்பவத்தால் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதுடன் உலகளாவிய எரிபொருள் சந்தையிலும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.













Leave a Reply