பிரான்சில் வீட்டு மற்றும் நில சொத்துகளுக்கு விதிக்கப்படும் “Taxe Foncière” எனப்படும் சொத்து வரி கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 35% அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டில் பிரான்ஸ் முழுவதும் வீட்டு உரிமையாளர்கள் சராசரியாக 1,117 யூரோ வரை இந்த வரிக்காக செலுத்தியுள்ளனர்.
பணவீக்கம் உள்ளூர் நிர்வாகங்களின் வரி உயர்வு தீர்மானங்கள் மற்றும் வீட்டுவரி (Taxe d’Habitation) நீக்கம் போன்ற காரணங்கள் இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
புதிய தரவரிசைப்படி அதிக சொத்து வரி வசூலிக்கப்படும் மாவட்டங்களில் Seine-Saint-Denis முதலிடத்தில் உள்ளது. அங்கு வீட்டு உரிமையாளர்கள் சராசரியாக 3,675 யூரோ செலுத்துகின்றனர். அதன் பின்னர் Mayotte மாவட்டத்தில் 3,626 யூரோவும் Guyane பகுதியில் 3,006 யூரோவும் வசூலிக்கப்படுகிறது.
மேலும் Île-de-France பகுதியிலுள்ள பல மாவட்டங்களும் உயர்ந்த வரி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. நிபுணர்கள் கூறுவதாவது அதிக மக்கள் அடர்த்தி, உயர்ந்த நில மதிப்பு மற்றும் பல சொத்துகள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் சில பகுதிகளில் சொத்து வரி மிக அதிகமாக உள்ளது.
இதனால் பிரான்சில் வீடு வாங்குவது அல்லது முதலீடு செய்வது குறித்து பலரும் மீண்டும் சிந்திக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





Leave a Reply