பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood), தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய அதிகாரங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். இதன்மூலம் வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் உளவு நடவடிக்கைகள் நாசவேலைகள் மற்றும் வன்முறைச் செயல்களை எதிர்கொள்வது எளிதாகும் என்று அரசு கூறியுள்ளது.
பிரதமர் சர் கியர் ஸ்டார்மர் பிரிட்டன் நாட்டை அச்சுறுத்தல், வன்முறை மற்றும் பயத்தை பரப்ப விரும்பும் வெளிநாட்டு அமைப்புகளுக்கான தளமாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
அரசின் தகவலின்படி IRGC-யுடன் தொடர்புடையதாக நம்பப்படும் குழுக்கள் பிரிட்டனில் உள்ள யூத மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய இலக்குகளை குறிவைத்து பல தாக்குதல் முயற்சிகளில் ஈடுபட்டதாக பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இதன் பின்னணியில் இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் அமலுக்கு வரும். மேலும் IRGC மட்டுமல்லாமல் ரஷ்யாவுடன் தொடர்புடைய ஒரு அமைப்பும் மற்றொரு குழுவும் இதே நடவடிக்கையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.


































