கர்ணன் போன்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இந்தக் கதைக்கான திரைக்கதை தன்னை வந்தடையும் என எதிர்பார்க்கவில்லை என்றும், இப்படத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ரமேஷ் வர்மாவுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணத்தை நன்றியுடனும் பணிவுடனும் தொடங்குவதாகவும், ரசிகர்களின் ஆசீர்வாதம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
ரமேஷ் வர்மா இயக்கும் புராணப் படம்
இயக்குநர் ரமேஷ் வர்மா தனது பதிவில், ராகவா லாரன்ஸ் ஒரு முகம், ஓர் ஆளுமை, ஒரு வீரன் எனக் குறிப்பிட்டு, அவர் மஹாவீர் கர்ணனாகப் புராணப் படத்தில் அடியெடுத்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.
‘மஹாவீர் கர்ணா’ படத்தை பென் மூவீஸ், ஸ்ரீநீலத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ராம்ஜி டாட் ஒளிப்பதிவு செய்கிறார். ஞானி இசையமைக்க, ஸ்ரீமணி வசனம் எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் 2027ஆம் ஆண்டு திரைக்கு வர உள்ளது. Raghava Lawrence Mahaveer Karna படத்தின் வெளியீட்டு தேதி குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.





























