கேரள வெளியீட்டு உரிமையை பெற்ற வேஃபேரர் பிலிம்ஸ்
ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த தகவலை நிவின் பாலி தனது சமூக வலைதளப் பதிவில் பகிர்ந்துள்ளார். துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் இந்தப் பயணத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது தனக்கு சிறப்பான விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Yezhu Kadal Yezhu Malai Kerala release தொடர்பான இந்த அறிவிப்பு, படத்தின் கேரள திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்துள்ளது.
நிவின் பாலியும் துல்கர் சல்மானும் ஏற்கெனவே ‘விக்கிரமாதித்யன்’ மற்றும் ‘பெங்களூரு டேஸ்’ ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.































