சொத்து பிரச்சினை குறித்து அம்பிகா விளக்கம்
அம்பிகா கூறுகையில், தாயார் இறப்பதற்கு முன்பே சொத்து தொடர்பான பிரச்சினை தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். தாயார் இறந்த பின்னர் சொத்தைப் பிரிப்பதற்கு ஒப்புக்கொண்டவர்கள், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரச்சினை குறித்து பலமுறை பேச முயன்றதாகவும், ராதா தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்காததால் சட்டப்படி அணுகியதாகவும் அம்பிகா தெரிவித்துள்ளார். மேலும், தனது வீட்டில் வைத்துவிட்டு சென்ற காசோலையை தாமே திருடுவேனா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தக் காசோலை தமக்கு கையொப்பமிட்டு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏ.ஆர்.எஸ் கார்டன் இடம் எம்.ஜி.ஆர் இலவசமாக வழங்கியது அல்ல என்றும் அம்பிகா தெரிவித்துள்ளார். தேவர் கம்பெனி பிலிம்ஸில் தங்களது தாயார் பணம் கொடுத்து வாங்கிய இடம் என்றும், குடும்பம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் அந்தச் சொத்து வாங்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். Ambika cheque fraud allegation தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார்.































