பாரூக் வீட்டில் இருந்த நிலையில், அவரது தாய் நிஷா வீட்டு வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று மாலை திரும்பியுள்ளார். அப்போது பாரூக் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அவர் கதறி அழுதுள்ளார். அழுகைச் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மது போதையில் ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை
தகவலின்பேரில் தில்லை நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அரவிந்த் பனாவத் மற்றும் தில்லை நகர் உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோரும் நேரில் சென்று விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சகோதரர்கள் இருவருக்கும் போதைப் பழக்கம் இருந்ததாகவும், அசாருக்கு கஞ்சா மற்றும் மது பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி மது போதையில் சண்டையிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது வீட்டில் இருந்த கத்தியால் பாரூக்கின் கழுத்தை அறுத்திருக்கலாம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. Trichy auto mechanic murder குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.





























