Tag: Terrorism
பிரான்சில் வெளிநாட்டினருக்கு மிரட்டல், பிரான்சின் கோர்சிகா தீவில் கோர்சியர் அல்லாத மக்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களைத் தொடர்ந்து தேசிய பயங்கரவாத தடுப்பு வழக்கறிஞர் அலுவலகமான பயங்கரவாத தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணை கோர்சிகா விடுதலை முன்னணி அமைப்பின் உறுப்பினர்கள் நடத்தியதாகக் கூறப்படும் இரகசிய ஆயுதம்சூழ்ந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கோர்சிகாவிற்கு குடியேறும் கோர்சியர் அல்லாத பிரெஞ்சு மற்றும் வெளிநாட்டு மக்களை கடுமையாக விமர்சித்ததுடன் அவர்கள் தீவை விட்டு விலக வேண்டும் என எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை கடமையை அலட்சியம் செய்தமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் […]
UK IRGC Ban 2026 தொடர்பாக பிரிட்டன் அரசு முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. ஈரானின் Islamic Revolutionary Guard Corps (IRGC)-க்கு ஆதரவு தெரிவிப்பது, அதன் நடவடிக்கைகளுக்கு உதவுவது அல்லது அதனைப் பாராட்டும் வகையில் செயல்படுவது குற்றமாக்கப்பட உள்ளது. இதற்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood), தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய அதிகாரங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். […]
விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா தொடர்பாக புதிய தகவல்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனு நேற்று (09) நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத் முக்கிய விடயங்களை முன்வைத்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனக் டி […]
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உண்மையான குற்றவாளிகளை நோக்கிச் செல்லாமல் திசைதிருப்பப்படுகின்றன என ஜனநாயத்துக்கான இலங்கை சமூக ஊடகவியாளர்கள் அமைப்பின் ஆலோசகர் அதீத எதிரிசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் கடந்த காலத்தில் அதிகாரிகளிடம் இருந்தபோதிலும் அவற்றின் அடிப்படையில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தார். குறிப்பாக தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் தொடர்பான தகவல்கள் […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எந்தவித அழுத்தங்களும் சவால்களும் வந்தாலும் அரசாங்கம் கைவிடப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டவல தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மீது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் ஒரு பகுதியாகவே இந்த […]
சிரியாவில் இருந்து திரும்பிய ஆஸ்திரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டு. சிரியாவில் உள்ள அகதி முகாம்களில் பல ஆண்டுகள் தங்கியிருந்த ISIS தொடர்புடைய ஆஸ்திரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மூன்று பெண்கள் மீது தீவிரவாதம் மற்றும் அடிமைத்தன குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய அதிகாரிகளின் தகவலின்படி 53 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்கள் மனிதத்தன்மைக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பெண்களை அடிமையாக வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். மேலும் மற்றொரு 32 […]
லண்டன் இஸ்ரேல் தூதரக தாக்குதல் நபருக்கு பயங்கரவாத குற்றவாளி என தீர்ப்பு லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல்பாத்ரி (34) என்பவரை பிரிட்டன் நீதிமன்றம் பயங்கரவாத குற்றங்களில் குற்றவாளியாக அறிவித்துள்ளது. 2025 ஏப்ரல் மாதம் நடந்த லண்டன் இஸ்ரேல் தூதரக தாக்குதல் சம்பவத்தில் அவர் லண்டன் நகரில் தூதரகத்தை நோக்கி நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததாகவும் முகத்தை மறைக்கும் உடை […]