நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் திலக்கரத்ன பண்டார ஆகியோரின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நீதிபதி விராஜ் வீரசூரிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி விடுதலையை பரிந்துரைக்கும் சிறுபான்மை தீர்ப்பை வழங்கினார்.
நீதிமன்றம் தனது தீர்ப்பில் 2019 ஏப்ரல் 20ஆம் தேதி மாலை தாக்குதல் தொடர்பான முக்கிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் தேவாலயங்கள் மற்றும் முக்கிய இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியது. இந்த அலட்சியத்தின் விளைவாக 2019 ஏப்ரல் 21ஆம் தேதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 268 பேர் உயிரிழந்ததுடன் 586 பேர் காயமடைந்தனர்.
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் உள்நாட்டுப் போருக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படுகிறது. நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் இரு முன்னாள் உயரதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.






























