விசாரணை கோர்சிகா விடுதலை முன்னணி அமைப்பின் உறுப்பினர்கள் நடத்தியதாகக் கூறப்படும் இரகசிய ஆயுதம்சூழ்ந்த செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் கோர்சிகாவிற்கு குடியேறும் கோர்சியர் அல்லாத பிரெஞ்சு மற்றும் வெளிநாட்டு மக்களை கடுமையாக விமர்சித்ததுடன் அவர்கள் தீவை விட்டு விலக வேண்டும் என எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் பின்னர் பயங்கரவாத நோக்கத்துடன் குற்றச் சங்கம் அமைத்தல் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணையை ஆரம்பித்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரான்ஸ் அரசியல் வட்டாரங்களில் கோர்சிகா தன்னாட்சியைச் சுற்றிய விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த மிரட்டல் சம்பவம் தீவின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது































