சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

துறைநீலாவணை ஆலய தாக்குதல் – தலைவர் உட்பட 7 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் உள்ள உச்சிமா காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் மேற்கொண்டதாக கூறப்படும் இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 31ஆம் தேதி இரவு இடம்பெற்ற துறைநீலாவணை ஆலய தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஆலய பரிபாலன சபை தலைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading