இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை பகுதியில் அமைந்துள்ள உச்சிமா காளி அம்மன் ஆலயத்தில் பூஜை நிகழ்வின்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கடுமையான கைகலப்பாக மாறி சிலர் உயிருக்கு ஆபத்தான அளவில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகவலின்படி ஆலயத்தில் நடைபெற்ற பூஜை நேரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறியதுடன் பின்னர் அது உடல் மோதலாக தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்புடைய சிலர் தங்களை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக கூறியுள்ளனர்.
மேலும், தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக பொலிஸில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் பொலிஸார் பக்கச்சார்பாக செயல்படுகின்றனர் என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட தரப்பினரிடையே உருவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உடனடி மற்றும் நியாயமான விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Leave a Reply