சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Immigration News
ஐரோப்பிய ஒன்றியம் (EU) சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Return Hubs (திரும்ப அனுப்பும் மையங்கள்) என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் நாடு விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட குடியேற்றிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள மூன்றாம் நாடுகளில் அமைக்கப்படும் சிறப்பு மையங்களுக்கு அனுப்பப்படலாம்.

அங்கு அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை தங்க வைக்கப்படுவார்கள். தற்போதைய நிலையில் இந்தத் திட்டம் குறித்து உறுப்புநாடுகளுக்கிடையில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. Immigration News

மனித உரிமை அமைப்புகள் இந்த நடவடிக்கை குடியேற்றிகளின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கவலை வெளியிட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் திருப்பி அனுப்பும் செயல்முறையை வேகப்படுத்த இது அவசியம் என வலியுறுத்துகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்