மேலும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதவர்கள் அல்லது தப்பிச் செல்லும் அபாயம் உள்ளவர்கள் 24 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அமைக்கப்படும் Return Hubs எனப்படும் மையங்களுக்கும் அனுப்பும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய குடியேற்ற விதிமுறைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் வழங்கப்படும் நாடுகடத்தல் உத்தரவுகளில் தற்போது சுமார் 20% மட்டுமே நடைமுறைக்கு வருவதாகக் கூறப்படும் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆதரவாளர்கள் இது சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த உதவும் எனக் கூறுகின்றனர்.
ஆனால் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் நீண்டகால தடுப்புக் காவல் வெளிநாட்டு திருப்பி அனுப்பும் மையங்கள் மற்றும் அகதிகளின் உரிமைகள் குறைவடையும் அபாயம் குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்ற மற்றும் அகதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் எல்லை கட்டுப்பாடுகள் அகதி விண்ணப்ப பரிசீலனைகள் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நாடுகடத்தல் நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படவுள்ளன.
































