இதனைத் தொடர்ந்து மே 22 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி நிந்தவூர் கலாசார நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைப்பதுடன் அம்பாறை நகரில் அமைக்கப்படவுள்ள புதிய வர்த்தகத் தொகுதிக்கான கட்டுமானப் பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். மேலும் விஜயத்தின் இறுதிநிகழ்வாக அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிராந்திய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் தேவைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி Anura Kumara Dissanayake எதிர்வரும் மே 20 மற்றும் 22 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. விஜயத்தின் முதல் கட்டமாக மே 20 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் செல்லும் ஜனாதிபதி பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ள “ரட்டம எகட்ட” (முழு நாடும் ஒன்றாக) தேசிய வேலைத்திட்ட நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளார்.































