நூலகத்தில் சிறுவர்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பரப்பும் சிறப்பு பிரிவும் அமைக்கப்பட்டுள்ளதுடன் டிஜிட்டல் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் சூழலில் தமிழ் சமூகத்தில் இன்னும் வாசிப்பு மீதான ஆர்வம் நிலைத்திருப்பது பாராட்டத்தக்கது என ஜனாதிபதி குறிப்பிட்டார். “ஒரு நூலகத்தைத் திறப்பது ஒரு சிறைச்சாலையின் தேவையை குறைப்பதற்கு சமம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். திறப்பு விழாவைத் தொடர்ந்து ஜனாதிபதி நூலக வளாகத்தையும் பார்வையிட்டு மாநகர சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
மேலும் நினைவுச் சின்னம் ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டதுடன் நூலக வளாகத்தில் மரக்கன்றும் நட்டார். 1855ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமையான மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய வடிவமாக இந்தக் கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இது கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கு புதிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



























