France
பிரான்சில் 90 நாட்களுக்கு மேல் (3 மாதங்களுக்கு மேல்) தங்க திட்டமிடும் வெளிநாட்டு பிரஜைகள் முன்கூட்டியே Visa de Long Séjour (Long-Stay Visa) பெற வேண்டும். இந்த விசா பொதுவாக 3 மாதங்கள் முதல் 1 வருடம் வரை செல்லுபடியாகும்.
விசாவின் காலம் முடிந்த பின்னரும் பிரான்சில் தொடர்ந்தும் தங்க விரும்பினால் பின்னர் Titre de Séjour (Residence Permit) பெற விண்ணப்பிக்க வேண்டும்.
நீண்ட காலம் தங்கியிருக்கும் விசா வகைகள்
VLS-TS (குடியிருப்பு அனுமதிக்கு இணையான நீண்ட கால விசா)
- 4 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை செல்லுபடியாகும்.
- தனியாக Residence Permit பெற வேண்டிய அவசியமில்லை.
- பிரான்ஸ் வந்த 3 மாதங்களுக்குள் ANEF தளத்தில் ஆன்லைனில் சரிபார்க்க (validate) வேண்டும்.
- கல்வி, வேலை, குடும்ப இணைப்பு, நீண்டகால தங்கல் போன்ற பல நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது.
குடியிருப்பு அனுமதியுடன் கூடிய நீண்ட கால விசா விண்ணப்பம்
சில விசாக்களில் பிரான்ஸ் வந்த 2 மாதங்களுக்குள் Préfecture அலுவலகத்தில் சென்று Residence Permit பெற வேண்டும்.இது குறிப்பாக சில வேலை மற்றும் Passeport Talent பிரிவுகளுக்கு பொருந்தும்.
VLS-T (தற்காலிக நீண்ட கால விசா)
- குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
- பொதுவாக 4 முதல் 6 மாதங்கள் அல்லது சில சந்தர்ப்பங்களில் 1 வருடம் வரை.
- புதுப்பிக்க முடியாது.
- Residence Permit பெறும் உரிமை இல்லை.
- தற்காலிக தங்கலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
நீண்டகால விசா பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது. பிரான்சில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்கள், உயர்கல்வி அல்லது பல்கலைக்கழகப் படிப்புகளை தொடரும் மாணவர்கள், தொழில்பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப் மேற்கொள்ளுபவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதற்காக வரும் நபர்கள் நீண்டகால சுற்றுலா அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக தங்க விரும்புபவர்கள், ஓய்வுபெற்ற வாழ்க்கையை பிரான்சில் கழிக்க விரும்பும் நபர்கள் மற்றும் Passeport Talent (Talent Passport) திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற திறமையான தொழிலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் ஆகியோர் இந்த நீண்டகால விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்.
விசா வகையைப் பொறுத்து அது வேலை செய்யும் உரிமை கல்வி கற்கும் உரிமை அல்லது குடும்பத்துடன் வசிக்கும் உரிமை போன்ற சிறப்பு அனுமதிகளையும் வழங்கும்.
விசா வகையை பொறுத்து ஆவணங்கள் மாறுபடலாம் ஆனால் பொதுவாக கீழ்வரும் ஆவணங்களை நீங்கள் தயார்படுத்த வேண்டும்
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042
- செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
- விண்ணப்பப் படிவம்
- பாஸ்போர்ட் புகைப்படங்கள்
- பிரான்சில் தங்குமிட சான்று
- போதுமான நிதி ஆதாரம்
- மருத்துவ காப்புறுதி
- வேலை அல்லது கல்வி தொடர்பான ஆவணங்கள்
- குடும்ப உறவு ஆவணங்கள் (தேவையானால்)
விண்ணப்பிக்கும் முறை
உங்கள் விசா வகையை சரிபார்க்கவும்
அதிகாரப்பூர்வ France-Visas இணையதளத்தில் உங்கள் விசா வகையை சரிபார்க்கவும்.

முதலில் France-Visas தளத்தில் உள்ள Visa Wizard-ஐ பயன்படுத்தி உங்களுக்கு எந்த வகையான Long-Stay Visa தேவை என்பதை கண்டறிய வேண்டும். இது உங்கள் தேசியம், பயண நோக்கம், தங்கும் காலம் மற்றும் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு தேவையான ஆவணங்களையும் காட்டும்.
தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவும்
பாஸ்போர்ட் பொதுவாக விசா காலாவதியாகும் தேதிக்கு குறைந்தது 3 மாதங்கள் கூடுதல் செல்லுபடியாக இருக்க வேண்டும். அத்துடன் மேலே குறிப்பிட்டு தேவையான சகல ஆவணங்களும் தயார் படுத்தவும்
விண்ணப்பத்தை நிரப்பவும்
விண்ணப்ப படிவத்தை பதிவதற்கு இங்கு கிளிக் செய்யவும்
Appointment பதிவு செய்யவும்
நீங்கள் எந்த நாட்டில் இருந்து உங்களுக்கான சந்திப்புக்கான பதிவை செய்யப் போகிறீர்களோ அந்த நாட்டை தெரிவு செய்து உங்களுக்கான முன் பதிவை பதிந்து எடுத்துக் கொள்ளுங்கள்
முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
சந்திப்புக்கான நாளன்று அனைத்து ஆவணங்களும் உங்களோடு எடுத்துச் செல்ல வேண்டும் 12 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலான ஷெங்கன் விசா விண்ணப்பதாரர்கள் விண்ணப்பச் செயல்முறையின் ஒரு பகுதியாக தங்களது கைரேகைகள் (Fingerprints) மற்றும் டிஜிட்டல் புகைப்படத்தை (Digital Photograph) சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பயோமெட்ரிக் தகவல்கள் விசா தகவல் அமைப்பில் (VIS) பதிவு செய்யப்படுகின்றன.
எனினும் கடந்த 59 மாதங்களுக்குள் (சுமார் 5 ஆண்டுகள்) ஏற்கனவே ஷெங்கன் பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் சில சந்தர்ப்பங்களில் மீண்டும் கைரேகை வழங்குவதிலிருந்து விலக்கு பெறலாம்.
இருப்பினும் தேவையானபட்சத்தில் அதிகாரிகள் மீண்டும் பயோமெட்ரிக் தகவல்களை கோரக்கூடும்.
நீங்கள் பிரான்ஸ் வந்த பிறகு
LS-TS (Visa de Long Séjour valant Titre de Séjour) விசா பெற்றவர்கள் பிரான்சிற்கு வந்த பிறகு முக்கியமாக செய்ய வேண்டிய முதல் நடவடிக்கை தங்கள் விசாவை 3 மாதங்களுக்குள் ANEF (Administration Numérique pour les Étrangers en France) ஆன்லைன் தளத்தில் கட்டாயமாக Validate செய்வதாகும்.
ANEF (Administration Numérique pour les Étrangers en France)

இந்த Validation செயல்முறையை மேற்கொள்ளாத பட்சத்தில் விசா சட்டபூர்வமான செல்லுபடியாகும் நிலையை இழக்கக்கூடும். விசாவை வெற்றிகரமாக Validate செய்த பின்னர் பிரான்சில் சட்டபூர்வமாக தங்கும் உரிமை உறுதிப்படுத்தப்படுவதுடன் சமூக பாதுகாப்பு (Sécurité Sociale), மருத்துவ காப்புறுதி,வங்கி கணக்கு திறத்தல் வேலை தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் பிற அரச சேவைகளை அணுகுவதும் எளிதாகும்.
எனவே, VLS-TS விசா வைத்திருப்பவர்கள் பிரான்ஸ் வந்தவுடன் இந்த Validation செயல்முறையை தாமதமின்றி நிறைவேற்றுவது மிகவும் அவசியமாகும்.













Leave a Reply