மொனராகலை மாவட்டத்தில் டித்வா இழப்பீட்டு வழங்கல் நடவடிக்கைகளில் முறைகேடு இடம்பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனர்த்த நிவாரண சேவை அதிகாரியின் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய கிராம சேவகரும் விசாரணைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் நிலையில் மற்றொரு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் நிர்வாக தவறுகள் குறித்து தற்போது விரிவான மற்றும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக தேவையான சட்ட மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.





Leave a Reply