நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிரந்தர வீடமைப்பு, அடிப்படை வசதிகள், காணி ஒதுக்கீடு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மழை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பற்ற பகுதிகளில் வாழும் மக்களை விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலும் மீள்குடியேற்றப் பணிகளில் காணப்படும் நிர்வாக தாமதங்களை தவிர்த்து மக்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக்கூடிய வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் கல்வி வசதிகள் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.





Leave a Reply