இந்த அபாயத்தால் திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை போன்ற பிரதேச செயலகப் பகுதிகள் பாதிப்பு அபாய பட்டியலில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பகுதிகளின் சில சாலைகள் நீரில் மூழ்கக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர தயாராக இருக்க வேண்டும் என்றும் அனர்த்த மேலாண்மை அமைப்புகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.






























