Tag: Disaster Management
Hatton Landslide, நுவரெலியா மாவட்டம் ஹட்டன், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரஹெனகம பகுதியில் ஏற்பட்ட மண்மேடு சரிவில் வீடு ஒன்று புதையுண்டதில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனமழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மீட்புப் பணிகளில் பொலிஸார், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பிரதேச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் சிக்கியவர்களில் 82 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் […]
New Zealand News,நியூசிலாந்தின் தெற்கு தீவில் உள்ள தே ஆனு (Te Anau) நகருக்கு அருகே 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு தற்காலிகமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 9.14 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஃபியோர்ட்லாண்ட் பகுதிக்கான நுழைவாயிலாக விளங்கும் தே ஆனு நகரிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் வடக்கே அமைந்திருந்ததாக நியூசிலாந்தின் தேசிய அவசரகால […]
Weather Report,காலநிலை மாற்றத்தால் உருவாகும் புதிய சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் தற்போதைய பேரிடர் தயார்நிலை போதுமான அளவில் இல்லை என பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) எச்சரிக்கை விடுத்துள்ளது.அதிகரித்து வரும் தீவிர மழை, வெள்ளம், மண்சரிவு, கடும் காற்று மற்றும் பிற இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவசர செயற்பாட்டு திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் முகாமைத்துவ மையத்தின் அதிகாரிகள் தெரிவிப்பதாவது காலநிலை மாற்றத்தின் தாக்கம் எதிர்காலத்தில் […]
Asia News,ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தொலைதூர தீவுக் கூட்டங்களை சக்திவாய்ந்த பவி (Typhoon Bavi) புயல் நெருங்கி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஜப்பானின் ஒகினாவா மாகாணத்திற்கு உட்பட்ட தைவானுக்கு அருகிலுள்ள சாகிஷிமா தீவுகள் வழியாக புயல் கடந்து செல்லும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு சுமார் 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை […]
Sri Lanka News,இலங்கையில் வரவிருக்கும் மாதங்களில் எல் நினோ தாக்கம் காரணமாக வானிலை அதிக மாற்றங்களைச் சந்திக்கக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம், திடீர் கனமழை, வறட்சி மற்றும் பலத்த காற்று போன்ற அசாதாரண காலநிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மாற்றங்களால் விவசாயம், நீர்வள முகாமைத்துவம் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள் மற்றும் […]
மக்களின் உயிரும் வாழ்வாதாரங்களும் ஆபத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளை மறந்து “இலங்கை” என்ற ஒரே தரப்பாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரிவான மூலோபாய கொள்கை முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தார். 2026–2027 எல் நினோ சுழற்சி கடுமையான வறட்சி […]
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் தேசிய மட்டச் செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக விசேட அமைச்சரவை உபகுழுவொன்றையும் அதனை ஒருங்கிணைத்து செயல்படுத்த அதிகாரிகள் குழுவொன்றையும் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தால் விவசாயம் நீர்வள முகாமைத்துவம் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகிய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே எதிர்கொள்வதற்கான திட்டங்கள் இந்த செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் […]
எல் நினோ தாக்கத்தின் தொடர்பாக ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் முன்னெச்சரிக்கை திட்டங்களைத் தயாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய வறட்சி, வெள்ளம் மற்றும் விவசாய பாதிப்புகளை குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். காலநிலை ஆய்வாளர்களின் கணிப்புகளின்படி எதிர்வரும் மாதங்களில் எல் நினோ தாக்கத்தின் நிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் நீர்வள முகாமைத்துவம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் தயார்நிலை தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. […]
கராப்பிட்டிய தீ விபத்து காரணமாக இன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்த போதிலும் தீயணைப்பு பிரிவினரின் விரைவான மற்றும் திறமையான நடவடிக்கையால் தீ பரவல் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தீ மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு பிரிவினரும் வைத்தியசாலை பணியாளர்களும் இணைந்து செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான […]
டிட்வா நிவாரணத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்துள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் (Humanitarian Priorities Plan) நிறைவு நிகழ்வு இன்று (11) கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே டிட்வா சூறாவளியால் […]