எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் தேசிய மட்டச் செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக விசேட அமைச்சரவை உபகுழுவொன்றையும் அதனை ஒருங்கிணைத்து செயல்படுத்த அதிகாரிகள் குழுவொன்றையும் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காலநிலை மாற்றத்தால் விவசாயம் நீர்வள முகாமைத்துவம் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகிய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே எதிர்கொள்வதற்கான திட்டங்கள் இந்த செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.







Leave a Reply