சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இலங்கையைக் காப்போம் – வலுசக்தி பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம்

வலு சக்தியை சிக்கனமாகப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இலங்கையைக் காப்போம்” தேசிய வேலைத்திட்டம் நேற்றைய தினம் (29) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம் வலுசக்தி வளங்களை பாதுகாக்கும் சமூகத்தை உருவாக்குவதாகும்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய “எல்-நினோ” வானிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகளை குறைக்கும் நோக்கில் அரசு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

அரச வளங்களை மிகவும் சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டும் என்பதையும், தேசிய வலுசக்திப் பாதுகாப்பிற்காக பொதுமக்களை நேரடியாக பங்களிக்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த வேலைத்திட்டம் இன்று முதல் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka திட்டத்தின் ஒரு பகுதியாக, “இலங்கையைக் காப்போம் – ஒன்றிணைவோம் – ஒளியேற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் செயல்படுத்தப்படுகிறது.

அரசாங்கம், அரை அரசியலமைப்புத் துறைகள், தனியார் துறை, சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது. மக்களை அதிக மின்சார பயன்பாட்டை evening 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான peak hours-இல் கட்டுப்படுத்தும் விதமாகவும், அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை பகல் நேரங்களில் செய்ய ஊக்குவிக்கும் விதமாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மின்சாரத்திற்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. ஆனால் நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர்மின்சாரம் மூலம் கிடைப்பதால், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. மக்கள் தானாக முன்வந்து ஒத்துழைக்க, மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்