நாட்டிற்கு ஆண்டுதோறும் 53 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக வருமானம் ஈட்டித் தரும் படகு உற்பத்தித் துறையை மேம்படுத்தும் வகையில் 76 மில்லியன் ரூபாய் செலவில் பேருவளை கடற்றொழில் துறைமுகத்தில் புதிய படகு இறங்குத்துறை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் நிர்வாகப் பொறுப்பை இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததுடன் தேசிய பொருளாதார வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியம் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.




























