பிரிட்டனில் சட்டபூர்வமாக வசித்து வரும் குடியேற்றத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு குறிப்பாக 5 வயது வரை உள்ள சிறுவர்களுக்குக் கூட நாட்டை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சகம் (Home Office) கடிதங்கள் அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழந்தைகள் அனைவரும் Care Worker Visa பெற்ற பெற்றோரின் சார்பாளர்களாக (dependants) பிரிட்டனில் வசித்து வருகின்றனர்.
2024 மார்ச் மாதத்திற்கு முன்பு Care Worker விசா பெற்றவர்கள் தங்கள் துணைவர் மற்றும் குழந்தைகளை பிரிட்டனுக்கு அழைத்துவர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பின்னர் விதிகள் கடுமையாக்கப்பட்டன. இருப்பினும் தற்போது கடிதம் பெற்ற குடும்பங்கள் அந்த விதிமாற்றங்களுக்கு முன்பே சட்டபூர்வமாக பிரிட்டனுக்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்காட்லாந்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த Care Worker வருணி ஆராச்சிகே (Varuni Arachchige) தனது விசா 2031 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும் தனது கணவர் மற்றும் 8 மற்றும் 5 வயதுடைய குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கடிதம் பெற்றதாக தெரிவித்துள்ளார். குடும்பம் வரி செலுத்தி சட்டப்படி வாழ்ந்துவரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்திருப்பது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மற்றொரு Care Worker ஆன Rasika Samarasinghe மற்றும் அவரது மனைவி மூன்று குழந்தைகளும் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியில் நன்றாகப் படித்து சமூகத்தில் ஒன்றிணைந்த நிலையில் இந்த நடவடிக்கை குடும்பப் பிரிவை ஏற்படுத்தும் எனக் கவலை தெரிவித்துள்ளன.
குடியேற்ற உரிமைகள் அமைப்புகள் மற்றும் சட்ட நிபுணர்கள் இந்த நடவடிக்கை சமூகப் பராமரிப்பு துறையில் (Social Care Sector) பணிபுரியும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களுக்கு அநீதி செய்வதாக விமர்சித்துள்ளனர். Care Worker களுக்கு நிரந்தர குடியுரிமை (Settlement) பெற வேண்டிய காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளாக உயர்த்தும் திட்டமும் பலரை பிரிட்டனை விட்டு வெளியேறத் தூண்டக்கூடும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
இதற்கு பதிலளித்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் பிரிட்டனுக்கு பங்களிப்பு செய்பவர்களை வரவேற்கிறோம். ஆனால் குடியேற்ற அமைப்பின் மீது கட்டுப்பாட்டை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியம். பிரிட்டனில் நிரந்தரமாக குடியேறுவது ஒரு உரிமை அல்ல அது சம்பாதிக்க வேண்டிய ஒரு சிறப்புரிமை என்று தெரிவித்துள்ளது.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042













Leave a Reply