தித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு “தேசிய பாதுகாப்பு நாள்” நிகழ்வுகள் மாவட்ட மட்டத்தில் சர்வமத அடிப்படையில் நடத்தப்படவுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நினைவு நிகழ்வு 2025 டிசம்பர் 26 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை காலி நகரில் அமைந்துள்ள சுனாமி நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.

சுனாமி மற்றும் பிற இயற்கை பேரழிவுகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை, நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான சுனாமி பேரழிவில், இலங்கையில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். அத்துடன், பில்லியன் கணக்கான ரூபா மதிப்பிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

இந்தப் பேரழிவை நினைவுகூரும் வகையில், 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 26 ஆம் திகதி ஒவ்வொரு ஆண்டும் “தேசிய பாதுகாப்பு தினம்” என அறிவிக்கப்பட்டு, சுனாமி மற்றும் பிற பேரிடர்களில் உயிரிழந்த அனைவரையும் பொதுமக்கள் பங்கேற்புடன் நினைவு கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading