முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்பு நுகேகொடை பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்ல வசதி அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதுவரை கொழும்பு விஜயராமாவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச, கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அந்த இல்லத்தை விட்டு வெளியேறினார்.
அதன்பின்னர், தங்கல்ல பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சில காலம் வசித்து வந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் கொழும்புக்கு அருகிலுள்ள நுகேகொடை பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மருத்துவ வசதிகளை எளிதாகப் பெறவும் வசதியாக இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுகேகொடை பகுதியில் அவர் தங்கியிருக்கும் வீடு, அவரது நெருங்கிய நண்பருக்குச் சொந்தமானது என்றும், அந்த வீடு குத்தகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளதாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.





Leave a Reply