இதனால் பிராங்க்பர்ட் (Frankfurt) மியூனிக் (Munich) உள்ளிட்ட ஜெர்மனியின் முக்கிய விமான நிலையங்களில் இடைநிறுத்தம் (layover) செய்து மூன்றாம் நாடுகளுக்குச் செல்லும் இந்திய பயணிகள் கூடுதல் விசா விண்ணப்பம் கட்டணம் மற்றும் காத்திருப்பு நேரம் ஆகியவற்றிலிருந்து விடுபடுகின்றனர்.
எனினும் இந்த சலுகை விமான நிலையத்தின் சர்வதேச டிரான்சிட் பகுதியில் மட்டும் தங்குபவர்களுக்கு பொருந்தும். ஜெர்மனிக்குள் நுழைய அல்லது ஷெங்கன் (Schengen) பிராந்தியத்தில் செல்ல விரும்புவோர் வழக்கம்போல தேவையான விசாவை பெற்றிருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை இந்தியா ஜெர்மனி உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் பயண வசதிகளை எளிதாக்கவும் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாகக் கருதப்படுகிறது.






























