செயலி, இரண்டு முதல் மூன்று நாட்கள் வரையிலான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தரவுத்தளத்தை பயன்படுத்துகிறது. இதன் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தேவையான தகவல்களை மீனவர்கள் பெறுகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
செயலியை மேம்படுத்த ரூ.1 பில்லியன் ஒதுக்கீடு
செயலியின் திறனை மேலும் அதிகரித்து, அதன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக அண்மைய நாட்களில் வெளிநாட்டு நிறுவனங்களுடனும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடனும் அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.
மேம்பாடு மற்றும் புதுப்பிப்பு பணிகளுக்காக அமைச்சக நிதியிலிருந்து ரூ.1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதிப்படுத்தினார். இதன் மூலம் Sri Lanka fish locating app சேவை மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

































