74 நாடுகளில் மைக்ரோசாஃப்ட் சேவைகள் பாதிப்பு
நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் ஏற்பட்ட இந்த உலகளாவிய தடையால் Outlook, Teams, SharePoint, Copilot மற்றும் Exchange Online உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மொத்தம் 74 நாடுகளில் பாதிப்பு பதிவாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாய்ச்ச பான் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் சேவை பாதிக்கப்பட்டதால், மாற்றுப்பாதையில் இயக்கப்பட்ட ரயில்களின் நேர அட்டவணைகளை அனுப்புவது கடினமானது. இந்த Microsoft outage Germany பாதிப்பு, பெர்லின் நேரப்படி வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
OpenAI மற்றும் Anthropic நிறுவனங்களின் சில இணையச் சேவைகளிலும் இதே காலகட்டத்தில் இடையூறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சேவைகளை மீட்டெடுக்கும் முயற்சிகள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என மைக்ரோசாஃப்ட் ஆரம்பத்தில் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்துக்கு சைபர் தாக்குதல் காரணமாக இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என மைக்ரோசாஃப்ட் கூறியது. பாதுகாப்பான இணைப்புகளை உருவாக்கும் செயல்முறை பாதிக்கப்பட்ட சர்வர்களில் அதிக சுமையை சந்தித்திருக்கலாம் என பொறியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தடையுடன் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட கட்டமைப்பு மாற்றத்தை நிறுவனம் திரும்பப் பெற்றது.






























