கிளீன் ஸ்ரீலங்கா – மத்திய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு.
முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் நேற்றைய தினம் முற்பகல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. 424 மில்லியன் ரூபாய் செலவில் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் பல அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்பில் மற்றும் இலங்கை விமானப் படையின் ஆதரவுடன் 24 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட பணிகளின் மூலம் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவு செய்யப்பட்டது.






தினமும் சுமார் 75,000 பயணிகள் மற்றும் 2,000 பஸ்கள் பயன்படுத்தும் வகையில் முன்னேற்றமான வசதிகள் குளிரூட்டப்பட்ட சாரதி தங்குமிடங்கள் விற்பனை நிலையங்கள் நவீன சுகாதார வசதிகள் கேட்போர் கூடம் மற்றும் தகவல் மையங்கள் அனைத்தும் முனையத்தில் அடங்கியுள்ளன.
பொதுமக்களின் அர்ப்பணிப்பில் இந்த நிலையத்தை பராமரிப்பதே அடுத்த சவால் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கொழும்பு மேயர் விராய் கெலி பல்தசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.





Leave a Reply