2026 ஏப்ரல் 08 ஆம் தேதி புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புறக்கோட்டை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த முறைப்பாடு கொழும்பு பேருந்து நிலையம் நலன்புரி பிரிவினரால் அளிக்கப்பட்டதாகும். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 2026 ஏப்ரல் 11 ஆம் தேதி குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 33 வயதுடைய நபர் ஒருவர் களனி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட சொத்துகளின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்ய இலங்கை விமானப் படையினால் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 2026 ஏப்ரல் 17 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



























