சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ்ப்பாணம் – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயன்படும் வகையில் அனைத்து வசதிகளுடனான புதிய சேவை மத்திய நிலையம் இன்று (10) திறந்து வைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதியுதவியுடன் ரூபாய் 15 மில்லியன் செலவில் இந்த சேவை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரட்ட பெரியகுளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள இந்த “நல்லிணக்கத்தின் நிறுத்தும் சேவை நிலையம்” பயணிகள் ஓய்வெடுக்கவும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தின் திறப்பு விழா கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் – கொழும்பு பிரதான வீதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிப்பதால், பயணிகள் ஓய்வு எடுத்து தேவையான வசதிகளை பெறுவதற்காக இந்த சேவை மத்திய நிலையம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த திட்டம் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்