அதேவேளை தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் கெரன்வத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 67.5 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 44 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் மெத கோனவில பகுதியில் சிலாபம் பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது பெருமளவிலான கோடாவுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.































